News March 30, 2025
பரிசலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஊத்துபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி தம்பதிகள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கம் போல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடித்த போது நிலை தடுமாறி லட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கராஜ் ஆற்றல் குதித்தார் இருப்பினும் லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
தருமபுரி: போக்ஸோ வழக்கு; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (22) இவர் தனது உறவினரான சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கு தருமபுரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல்நாத் நவ.14ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
தருமபுரியில் 419 பேர் ஆப்சென்ட்!

தருமபுரியில் நேற்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில், 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511 தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்றும் ஆட்சியர் பார்வையிட்டார்.


