News March 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 589 பேர் தேர்வு எழுதவில்லை

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,344 மாணவர்களும் 6,281 மாணவிகளும் என மொத்தம் 12,625 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 52 தேர்வு மையங்களில் நடைபெற்ற பொது தேர்வில் நேற்று 399 மாணவர்களும் 190 மாணவிகள் என முத்தம் 589 தேர்வு எழுத வரவில்லை. 12,036 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 17, 2026
மயிலாடுதுறை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
மயிலாடுதுறை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 17, 2026
மயிலாடுதுறை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மயிலாடுதுறை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


