News March 30, 2025
சிக்கன் வாங்க கிளம்பிட்டீங்களா?

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) விலையில் மாற்றமின்றி ₹87க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் நேற்றையை விலையிலேயே இன்றும் சிக்கன் விற்பனையாகும். ஆனால், முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்த்தப்பட்டு ₹4.60க்கு விற்பனையாகிறது.
Similar News
News January 21, 2026
உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதால் அவர்களுக்கு PCOS போன்ற பிரச்னைகள் வருமோ என பெற்றோர் வருந்துகின்றனர். ஆனால் பூப்படைந்த முதல் 2 வருடங்களில் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் சொல்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகும்/, சீரற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு, முகத்தில் அதீத முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு டாக்டரை அணுகுங்கள். விழிப்புணர்வுக்காக, SHARE.
News January 21, 2026
‘நான் சாகப்போறேன்.. அப்பா என்னை மன்னிச்சிரு’

‘என்னை மன்னித்து விடுங்கள்… ஐ லவ் யூ அம்மா, அப்பா’. நாசிக்கில் மாற்றுத் திறனாளி பெண்ணான திக்ஷா(21), தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கையில் எழுதிய வாசகம் இது. தங்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த மகள் இப்படி செய்துவிட்டாளே என பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டில் தூக்கிட்டு கொண்ட திக்ஷாவின் சோக முடிவுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்.
News January 21, 2026
சற்றுமுன்: விஜய் முக்கிய முடிவு

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் ஜன.25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின், அரசியல் நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த விஜய், இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதில், தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.


