News March 30, 2025
2023 முதல் சேஸிங்கில் தோனி அணிக்காக செய்தது என்ன?

RCB அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, தோனி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் இருந்து CSK சேஸிங்கின் போது, தோனி 8 போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில், CSK வென்ற 3 போட்டிகளில், தோனி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே நேரத்தில், CSK தோற்ற 5 போட்டிகளில், அவர், 12 சிக்ஸர்களுடன் 73 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News January 25, 2026
கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

விடுமுறை நாளான இன்று, மக்களை வெளியே வரவிடாமல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!
News January 25, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
News January 25, 2026
14 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்

பத்மஸ்ரீ விருது: விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசன், ஒதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் ஆர்.கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சென்னை IIT இயக்குநர் வீழிநாதன் காமகோடி, கல்வியாளர் சிவசங்கரி. H.V.ஹண்டே.
பத்மவிபூஷன் விருதுகள்: கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக ஆர்வலர் மயிலாநந்தன், காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜய குமார்.


