News March 30, 2025
யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் இந்த புத்தாண்டு தினம். நமது பாரம்பரிய, பண்பாட்டு அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும், நிறைக்கட்டும். மேலும் புதுச்சேரியில் உள்ள தெலுங்கு மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
புதுவை: வீட்டில் செல்வம் செழிக்க இத பண்ணுங்க!

புதுவை மாநிலம் திருபுவனையில் அமைந்துள்ள கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் முலவரான வரதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 28, 2026
BREAKING: காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா நாளை (ஜனவரி 29) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. SHARE பண்ணுங்க!
News January 28, 2026
புதுச்சேரியில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. வேளாண் துறை சார்பில் நடத்தப்படும் இந்த 35வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி, வரும் ஜனவரி 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று தினங்கள் இக்கண்காட்சி நடைபெற உள்ளது என புதுச்சேரி வேளாண் துறை அறிவித்துள்ளது.


