News March 30, 2025

அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வக்குமார்(35) சுத்தமல்லி பிரிவு சாலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்து, அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 7, 2026

அரியலூர்: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

image

ஜெயங்கொண்டம் சூரியமணல் அருகே கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர், கடந்த ஜன.10ம் தேதி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்தனர். இந்நிலையில், கருப்புசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிரியா சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.

News February 7, 2026

அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர், ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று ( பிப்ரவரி 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரங்கோட்டை, கே.வி.குறிச்சி, காடுவெட்டான்குறிச்சி, அணைக்குடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.6) இரவு 10 முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!