News March 30, 2025
ஏழைகளுக்கு கூலி கொடுக்க கூட மனமில்லை: கனிமொழி

உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகள் உழைப்பிற்கு கூலி கொடுக்க ஒன்றிய பாஜக அரசு மனமில்லை எனவும், மோடி அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கமலாலயம் தவிப்பதாகவும் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கோரி நேற்று திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
Similar News
News April 2, 2025
வக்ஃபு நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோரா?: அமித்ஷா

வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதோரை வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கும் வகையில் எந்த சரத்தும் மசாேதாவில் இல்லை என்றும், 1995ஆம் ஆண்டு சட்டத்தில் கவுன்சில், போர்டு தொடர்பாக உள்ள சரத்துகள் மசோதா மூலம் திருத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 2, 2025
அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News April 2, 2025
சொந்த மண்ணில் திணறும் RCB

குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில் RCB அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற GT அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய RCBயின் துவக்க வீரர் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, RCB 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.