News March 30, 2025
கல்லூரிக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை

சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு (26) தொடர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகி உள்ளது. மேலும், மாணவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News February 9, 2026
சென்னையில் EB பில் எகுறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
சென்னை: ஊஞ்சல் புடவை இறுகி துடிதுடித்து பலி

சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மோனிஷ் (12). நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த போது சகோதரியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஊஞ்சல் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளது. இதில் மோனிஷ் பரிதாபமாக இழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
சென்னையில் பயங்கரம்.. வெட்டி சாய்த்த கும்பல்!

கொளத்தூரை சேர்ந்தவர் ஜான்பாஷா(39). மெக்கானிக்கான இவர் ராஜி(40) என்பவரது கடையில் வேலை பார்த்து வந்தார். ராஜியின் மகளை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த விக்னேஷ்(24) என்பவர் இன்ஸ்டாவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்யின் கும்பல் அரிவாளுடன் வந்து ராஜியை வெட்ட முயன்றார். குறுக்கே வந்த ஜான்பாஷாவுக்கு கை, தலையில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.


