News March 30, 2025

இபிஎஸ்ஸால் BJPயிடம் இதை சொல்ல முடியுமா? அமைச்சர்

image

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமையும் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்திருப்பதாகவும், அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 2, 2025

தூக்கத்தை தொலைக்கும் இந்தியர்கள்

image

இந்தியர்களில் 3-ல் ஒருவர் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58% பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44% பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது. 18% பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் செல்போன் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாம். நீங்க எப்படி?

News April 2, 2025

வக்ஃபு நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோரா?: அமித்ஷா

image

வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதோரை வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கும் வகையில் எந்த சரத்தும் மசாேதாவில் இல்லை என்றும், 1995ஆம் ஆண்டு சட்டத்தில் கவுன்சில், போர்டு தொடர்பாக உள்ள சரத்துகள் மசோதா மூலம் திருத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

image

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!