News April 2, 2024
ஒரு வாகனம், ஒரே ஃபாஸ்டேக் அமலானது

ஒரு வாகனம், ஒரே ஃபாஸ்டேக் நடைமுறை நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. ஒரே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வாகனத்துக்கு பல ஃபாஸ்டேக்குகள் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே வாகனத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக் இருந்தால் அவை செயல்படாது.
Similar News
News February 12, 2026
படுக்கைக்கு அழைப்பு.. நடிகை எஸ்தர் நோரானா தடாலடி!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சிலரால் சினிமாவின் தரம் கெடுவதாக நடிகை எஸ்தர் நோரானா கூறியுள்ளார். இந்த தலைமுறையினர் சினிமாவில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவர், முன்பு அப்படி இல்லை என்றார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் தவறானவர்கள் என்றால், அதற்கு உடன்படுவோரும் தவறானவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இவர் தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
News February 12, 2026
விஜய் கட்சி ஆரம்பித்திருக்க கூடாது: சீமான்

ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால், விஜய் ஆட்சியின் தரம் எப்படி இருக்கும் என சீமான் கேட்டுள்ளார். இந்த கட்சிகள் பிடிக்காமல்தான் விஜய் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், பிறகு அதே கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என அவர் சொல்வதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வளவு தூய கட்சி ஏற்கெனவே இருக்கிறதென்றால் விஜய் கட்சி ஆரம்பித்திருக்க கூடாது என கூறியுள்ளார்.
News February 12, 2026
GALLERY: உலகின் மிக அழகிய வண்ணமயமான பறவைகள்!

அழகின் மகிழ்ச்சியை கொண்டாட, உலகின் மிகவும் அழகான வண்ணமயமான பறவைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த லிஸ்ட்டில் இன்னும் என்ன பறவைகளை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?


