News March 30, 2025

DOGEலிருந்து வெளியேறும் மஸ்க்?

image

அமெரிக்க அரசின் வீண் செலவினங்களை, 130 நாள்களுக்குள், நாளொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைக்க செயல்திட்டம் தீட்டி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். இதன்மூலம், USA அரசு பொறுப்பில் (DOGE) இருந்து வரும் மே மாதம் எலான் மஸ்க் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை நீக்குவது உள்பட அவரது செயல்பாட்டிற்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 2, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 2, 2025

BREAKING: பெங்களூரு அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்பாேர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக காணலாம்.

News April 2, 2025

இந்தியாவின் பணக்கார பெண் இவர்தான்…!

image

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், டாப் 10-ல் இருக்கும் ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே. ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான அவர், நாட்டின் மூன்றாவது பணக்காரராகவும், முதல் பெண் பணக்காரராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி. இந்த பட்டியலில் அம்பானி (ரூ.7.90 லட்சம் கோடி), அதானி (ரூ.4.80 லட்சம் கோடி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

error: Content is protected !!