News March 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 2, 2025
BREAKING: பெங்களூரு அணி பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்பாேர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக காணலாம்.
News April 2, 2025
இந்தியாவின் பணக்கார பெண் இவர்தான்…!

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், டாப் 10-ல் இருக்கும் ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே. ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான அவர், நாட்டின் மூன்றாவது பணக்காரராகவும், முதல் பெண் பணக்காரராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி. இந்த பட்டியலில் அம்பானி (ரூ.7.90 லட்சம் கோடி), அதானி (ரூ.4.80 லட்சம் கோடி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.