News March 29, 2025
பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்

கும்பகோணம் செம்போடை அருகே உள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் நாளை (மார்ச்.30) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம்1.00 மணி வரை தஞ்சை மாவட்ட டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற உள்ளது.
Similar News
News April 7, 2025
தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, ஒருவர் கைது

தஞ்சை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு அதேபகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News April 6, 2025
தஞ்சையில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கடந்த திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாளை ஏப்ரல் 7ஆம் தேதி வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
News April 6, 2025
தீரா நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர் 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக உருவாக்கினார். அதில் ஒருவர் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. ஆகவே இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை, அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். அதற்குமாறாக 5 ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். இங்கு வழிபட்டால் அம்மை நோய் மற்றும் தீரா நோயும் தீரும் எனக்கூறப்படுகிறது.