News March 29, 2025
ஆண்களுக்கு எந்த உள்ளாடை சிறந்தது தெரியுமா?

ஆண்கள் பெரும்பாலும் அணியும் V Shape உள்ளாடை, விதைப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு காற்றோட்டத்தையும் குறைக்கும், அரிப்பையும் ஏற்படுத்தும். அதனால் காட்டன் துணியிலான Boxer Type உள்ளாடையே சிறந்தது என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அடுத்ததாக Boxer Briefs சிறந்தது என்கின்றனர். பாலியெஸ்டர், நைலான் கலந்த உள்ளாடைகள் ஒவ்வாமை, விந்தணு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
Similar News
News January 17, 2026
FLASH: புதிய முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

எந்தக் காலத்திலும் தனிக் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு, OPS மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.
News January 17, 2026
ஆட்சியில் பங்கு கேட்டாரா ராகுல் காந்தி?

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
‘ஜன நாயகன்’ பட ரிலீஸ்.. புதிய அப்டேட் வந்தது

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரத்தில் ஜன.20-ம் தேதி <<18862962>>ஐகோர்ட் <<>>முடிவெடுக்க SC உத்தரவிட்டது. ஒருவேளை அன்று சென்சார் கொடுக்க உத்தரவிட்டால், குடியரசுத் தினத்தையொட்டி ஜன.24-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜன.24 முதல் 26 வரை தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது; இதை பயன்படுத்திக்கொள்ள படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம்.


