News March 29, 2025
இன்று சனிப்பெயர்ச்சி: அதிக நன்மைகள் பெறும் 4 ராசிகள்

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்று (மார்ச் 29) இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இதனால் மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகள் அதிக நன்மைகள் பெறும். ரிஷபம், விருச்சிகம் இரு ராசிகளுக்கு நன்மை, தீமை இரண்டுவிதமான பலன்களும் ஏற்படலாம். அதேநேரம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன்பெறுமாம்.
Similar News
News April 2, 2025
அலர்ட்: இன்று கனமழை

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
News April 2, 2025
வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
News April 2, 2025
‘கடத்தல் நாயகி’யிடம் இருந்து விவாகரத்து கோரும் கணவர்?

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.