News March 29, 2025
காஞ்சிபுரம்: ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இன்று (29.03.2025) ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்/நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்ஃபோலியோ நீதிபதி) மாண்புமிகு திரு.நீதியரசர் கே.முரளிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்
Similar News
News April 4, 2025
காதலியை கல்லால் அடித்து கொலை: ஒப்புக்கொண்ட காதலன்

ஸ்ரீபெரும்புதுார், கொளத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). இவர், கடந்த புதன்கிழமை கொளத்தூர் மயானம் அருகே கல்லால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விக்னேஸ்வரியின் காதலன் தீபன் (27) என்பவரை விசாரித்ததில், தன்னைத் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
பஸ் பாஸ் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பஸ் பாஸ் அட்டை, மார்ச் 31ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.