News March 29, 2025
ராணிப்பேட்டையில் சுட்டெரிக்கும் வெயில்- தப்பிக்க சில டிப்ஸ்

ராணிப்பேட்டையில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க: 1) 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2) எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3) மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4) நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5) வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 3, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News April 2, 2025
இராணிப்பேட்டை: காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை

இராணிப்பேட்டை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்ரல் 02) அன்று காமாட்சி ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்குள்ள பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு அம்மனின் தரிசனத்தை பெற்றுக்கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
News April 2, 2025
குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.