News March 29, 2025
சனி பகவான் மகனின் தோஷம் நீக்கிய அற்புத தலம்

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க
Similar News
News April 2, 2025
திருவள்ளூரில் நீட் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
News April 2, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் மாராத்தான் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஏப்.6 அன்று காலை 6 மணிக்கு மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில், 16-36 வயதுடையோர் கலந்துகொள்ளலாம். போட்டியில், முதலில் வரும் ஐந்து ஆண்கள் & பெண்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படும். <
News April 2, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் வீணாக்கப்பட்ட ரூ.42 கோடி

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளம் அமைக்க ரூ.42,60,60000 ஒதுக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும் பணி முடிந்த நிலையில், 95% ஊராட்சிகளில் பணி அறைகுறையாகவே நடந்துள்ளது. குளம் வெட்ட சொன்னால் குழந்தைகள் விளையாட பள்ளம் வெட்டியது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரூ.42 கோடி வீணாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.