News March 29, 2025

அடுத்த 3 நாள்கள் அரசு விடுமுறை

image

நாளை முதல் அடுத்த 3 நாள்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 (நாளை)- உகாதி, மார்ச் 31- ரம்ஜான், ஏப்ரல் 1- வங்கிகள் கணக்கு முடிப்பு (வங்கிகளுக்கு மட்டும்) என தொடர்ச்சியாக 3 தினங்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள், இப்போதே சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Similar News

News April 2, 2025

வக்ஃப் மசோதா: அவையை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்

image

வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ஆர்.ராசா உள்ளிட்டோர் முழக்கமிட்டதை அடுத்து, தனது பேச்சை தொடர முடியவில்லை என ரிஜிஜு முறையிட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

News April 2, 2025

நேரலையில் வருகிறார் நித்தியானந்தா…!

image

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நேரலையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை(ஏப்.3) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசவுள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஜிப்லி டிசைனில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும் காத்திருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 2, 2025

இவரும் உங்களின் மோட்டிவேஷன் தான்

image

ராஜஸ்தானின் சுனிதாவிற்கு 3 வயதில் திருமணம் நடக்கிறது. 5 வயதில், படிக்க வேண்டும் என அப்பாவிடம் கெஞ்ச, அவர் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார். பகலில் வேலை, இரவில் படிப்பு என கஷ்டப்பட்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார். 19 வயதில் தனது ஊரின் முதல் பெண் கான்ஸ்டபிளாக வருகிறார். சில காலத்திலேயே, கருப்பை புற்றுநோய் வருகிறது. அதையும் போராடி வென்று, இன்று ‘போலீஸ்வாலி தீதி’ என பலராலும் கொண்டாடப்படுகிறார்.

error: Content is protected !!