News March 29, 2025
3 பேர் உயிரிழப்பு: ஆட்டோ – லாரி மோதி கோர விபத்து

மதுரை திருமங்கலம் அருகே ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.தொட்டியபட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீஸ், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News April 3, 2025
IPLன் மிக மோசமான ரெக்கார்ட்டை படைத்த RCB!

நேற்று, GTயிடம் RCB தோல்வியடைந்து, மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஒரே கிரவுண்டில் அதிக போட்டிகளை இழந்த டெல்லி அணியின் சாதனையை RCB சமன் செய்துள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை RCB விளையாடிய 92 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது. டெல்லி அணி, டெல்லியில் விளையாடிய 82 போட்டிகளில் 44ல் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News April 3, 2025
கிட்னியை கூட தறோம்.. உதவுங்க! கதறும் விவசாயி!

மகாராஷ்டிராவின் மார்க்கெட்டில், விவசாயி ஒருவர் வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க தயார் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடனுக்காக மனைவியின், இரு மகன்களின் கிட்னியையும் விற்கவும் தயார் என்றும் அவர் கூறுகிறார். இல்லையென்றால், தற்கொலை ஒன்றே தீர்வு என்றும் சொல்கிறார். தேர்தலுக்கு முன் அரசு சொன்ன விவசாய கடன் ரத்து என்பதை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
News April 3, 2025
தங்கம் விலை 38% குறையும்: ஜான் மில்ஸ் திடீர் கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறையக் கூடும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளார். தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று 38% வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080க்கு விற்கப்படும் நிலையில், விரைவில் $1,820ஆகக் குறையும் என அவர் கணித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.