News April 2, 2024

துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்

image

மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மார்ச் 14ம் தேதி முதல் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூர் சென்றுள்ளார். அங்கு பரப்புரை செல்வதற்கு முன்பு மருத்துவமனையில் உள்ள துரை தயாநிதியை, மனைவி துர்கா உடன் சென்று நலம் விசாரித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

தமிழக தேர்தல் தேதி எப்போது? வெளியானது UPDATE

image

தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் CEC ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை நடத்தினார். இதில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தமிழ் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா உள்ளிட்ட நாள்களில் வாக்குப்பதிவு நடத்த வேண்டாம் எனவும் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, கேரளா, மேற்குவங்கத்தில் ஆலோசனை நடத்திய பிறகு, தேர்தல் தேதியை ஞானேஷ்குமார் அறிவிக்க உள்ளார்.

News February 26, 2026

9 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய்: டாக்டர்கள் வார்னிங்

image

9 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இனிப்பு உட்கொள்வதே நோய் பாதிக்க காரணம் என்பது தவறான நம்பிக்கை; உடலுழைப்பு குறைந்த வாழ்கை முறையும் இதற்கு காரணமாகலாம்.
தேன், வெல்லம் சேர்த்துக் கொள்வது கூட சர்க்கரை அளவு உயரக் காரணமாகலாம், ஆகவே ஒல்லியாக இருப்பவர்களும், இளைஞர்களும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News February 26, 2026

தொகுதிப் பங்கீடு.. திமுக-காங். நாளை பேச்சுவார்த்தை

image

2 மாதங்களாகியும் காங்கிரஸை <<19234153>>தொகுதிப் பங்கீடு<<>> பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. TR பாலு தலைமையிலான குழுவை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர். 39 பேரவை தொகுதிகளும் + 2 ராஜ்ய சபா சீட்களையும் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!