News March 29, 2025
அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?

அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று பூவை ஜெகன்மூர்த்தி பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. கடந்த தேர்தலில், அவர் தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. இந்நிலையில், கூட்டணி பற்றி பேசியவர், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறாமல், பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
U19 WC: இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு இந்திய அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தனர். 39-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் 48.4 ஓவர்களில் இந்தியா 238 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
News January 17, 2026
சற்றுமுன்: முட்டை விலை குறைந்தது

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை சமீபமாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று முட்டை கொள்முதல் விலை ₹5.60-லிருந்து ₹5.30 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் ₹30 காசுகள் வரை குறைந்துள்ளது. இதனால், சில்லறை கடைகளில் ₹6 – ₹6.50 வரை முட்டை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.
News January 17, 2026
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை

வங்கதேசத்தில் ராஜ்பரி மாவட்டத்தை சேர்த்த ரிப்பன் சஹா என்ற இந்து இளைஞர் இன்று கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். கடந்த 30 நாள்களில் கொல்லப்படும் 10-வது இந்து இவர். BNP தலைவர் அபுல் ஹாஷிம் தனது காரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல முயன்றுள்ளார். அப்போது ரிப்பன் அவரைத் தடுக்க முயன்று போது அவர் மீது கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியாகினார். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.


