News March 29, 2025

தோனியை கேலி செய்த சேவாக்

image

RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 9வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனியை, வீரேந்திர சேவாக் கிண்டல் செய்துள்ளார். ரொம்ப சீக்கிரமாகவே பேட்டிங்கிற்கு தோனி வந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 19 அல்லது 20வது ஓவர் வரும் தோனி ஏன் 16ஆவது ஓவரில் வந்தார் என கமெண்ட் அடித்துள்ளார். அதனுடன் தோனி வேகமாக வந்தாரா? இல்லை விக்கெட் அவ்வளவு வேகமாக விழுந்ததா? எனவும் நையாண்டி செய்துள்ளார்.

Similar News

News January 15, 2026

நம்பர் 1-ல் சிங்கப்பூர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

image

2026-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளன. பட்டியலில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ல் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, 5 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், தற்போது இந்தியர்கள் 55 நாடுகளுக்கு  விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 15, 2026

ராசி பலன்கள் (15.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். அதிலும், நாளை பொங்கல் தினத்தில் உங்களுக்கான ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 15, 2026

ஆசிரியரின் உயிரை பறித்த திமுக அரசு: EPS

image

திமுக கொடுத்த பொய் வாக்குறுதி காரணமாகவே, <<18857511>>பகுதிநேர ஆசிரியர் கண்ணன்<<>> தற்கொலை செய்துகொண்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில் அவர், ஆசிரியர் மரணித்த கவலை கொஞ்சமும் இன்றி கவிதை பாடச் சொல்லி Vibe செய்யும் ஸ்டாலின், முதல்வர் என்ற உயரிய பதவிக்கு ஒரு இழுக்கு என விமர்சித்துள்ளார். மேலும், கண்ணனின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக திமுக அரசு ₹50 லட்சம் வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!