News April 2, 2024
கச்சத்தீவு விவகாரம்: திமுக – பாஜக துரோகிகள்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக இருவருமே துரோகிகள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 20,000 புத்தகங்களை படித்த அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது என கிண்டலடித்த அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News January 5, 2026
மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி: கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தான் தங்கள் கட்சி எதை நோக்கி பயணிக்கும் என்பதன் விடை தெரியும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் மாநில மாநாடு ஜன.7-ம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு வேறு கட்சிகளை அழைக்கவில்லை என்றும், மாநாட்டுக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
News January 5, 2026
இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்

காசநோயாளிகளுக்கு மாதாமாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். <
News January 5, 2026
வங்கதேச அணியை வழிநடத்தும் இந்து கேப்டன்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக KKR அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரகுமான் நீக்கப்பட்டார். எனினும் 2026 WC டி20-யில் வங்கதேச அணி கேப்டனாக இந்துவான லிட்டன் தாஸ் செயல்பட உள்ளதை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விளையாட்டில் அரசியலை புகுத்தி வரும் நிலையில், இந்த முடிவு ஒற்றுமையை விதைப்பதாகவும் கூறுகின்றனர்.


