News March 29, 2025
திமுக கொள்கை கூட்டணி அல்ல சூட்கேஸ் கூட்டணி

அதிமுகவினர் மீது திமுகவினர் கரிசனம் காட்டுவதுபோன்று பேசுவது ஏமாற்று வேலை. இது, ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவது போன்று உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல; சூட்கேஸ் கூட்டணி என்று விமர்சித்த அவர், திமுகவுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சியினரை சூட்கேஸ் உடன் சென்று அமைச்சர்கள் பார்க்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News February 3, 2026
திருப்பத்தூர் அருகே கோர விபத்து; தலைநசுங்கி பலி

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அசாருதின் இவர் லாரி கிளீனர் யாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்.2)அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
News February 3, 2026
கூட்டணி விஷயத்தில் பேரமா? கொந்தளித்த பிரேமலதா

கூட்டணி குறித்து திடமான முடிவை எடுக்காமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பிரேமலதா பேரம் பேசுவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பிற கட்சிகள் தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டால் அது கூட்டணி பேச்சுவார்த்தையாம்; அதே உரிமையில் தேமுதிக கேட்டால் பேரம் என்று விமர்சிக்கப்படுவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம், நீதி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 3, 2026
திமுகவை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு இல்லை: உதயகுமார்

திமுகவை தவெகவால் மட்டுமே வீழ்த்த முடியும் என விஜய் பேசியதற்கு EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் தவறை தட்டி கேட்டு அதை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக மட்டும்தான் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு யார் களத்தில் உள்ளார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


