News March 29, 2025

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம்!

image

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்னும் சற்று நேரத்தில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும். ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்காவில் தெரியும். வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் கிரகணம் என்பதால், சிறந்த பார்வை அனுபவத்தைப் பெறலாம்.

Similar News

News April 2, 2025

ஊடுருவ முயன்ற பாக்., ராணுவம்.. இந்தியா பதிலடி..

image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 -5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 2, 2025

சம்மர் சீசனில் டெய்லி தலைக்கு குளிக்கலாமா..?

image

வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பதை அறிவதற்கு முன், முடியின் தன்மையை அறிவது அவசியம். எண்ணெய் அதிகமாக சேர்ந்தால் என்றால், வாரத்தில் 3-4 வரை தலைக்கு குளிக்கலாம். ட்ரை ஹேர் என்றால், – வாரத்திற்கு 2 முறை போதும். என்ன இருந்தாலும், மாதத்தில் 4-5 முறை தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். மேலும், என்னவகை ஷாம்பூ யூஸ் செய்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.

News April 2, 2025

கச்சத்தீவு மீட்பு: தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு

image

சட்டப்பேரவையில் <<15965956>>முதல்வர் ஸ்டாலின்<<>> கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவையில் பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசு மீனவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்களாகவே பார்க்கிறது எனக் குறிப்பிட்டார். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது முதல், அது தவறு என பாஜக கூறி வருவதாகவும், வரலாற்று பிழையை சரிசெய்ய பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும் வானதி தெரிவித்தார்.

error: Content is protected !!