News March 29, 2025
வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நீலகிரி வாகன கட்டுப்பாடு வழக்கு நேற்று நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,ஊட்டி, வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை.அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர்நீதிமன்றம் விதித்திருக்கிறது என்று கூறி,மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது.
Similar News
News February 15, 2026
நீலகிரி: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க
News February 15, 2026
நீலகிரியில் பரபரப்பு

நீலகிரி: பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த மேபீல்டு பூதானகுன்னு பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் “வருகின்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் நுழைய மாட்டோம்” என மேபீல்டு பஜார் பகுதியில் பொதுமக்கள் பதாகை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 15, 2026
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தாட்கோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பயிற்சிகள் இளைஞர்களுக்கு நவீன காலத் தேவைகளுக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்று தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.


