News March 29, 2025
வசூல் ஏஜெண்டுகளாக வங்கிகள்: கார்கே

மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ₹23 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் அதற்கும் ₹100 முதல் ₹200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றார். இதுபோன்ற நடவடிக்கையை வங்கிகள் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 24, 2026
அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.
News January 24, 2026
மணத்தக்காளி கீரையின் நன்மைகள்!

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
News January 24, 2026
சீனா கனடாவை தின்றுவிடும்: டிரம்ப்

சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவுக்கு ஆபத்து என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கோல்டன் டோம் கிரீன்லாந்தின் மீது கட்டப்பட்டால் அது கனடாவையும் பாதுகாக்கும். இருப்பினும், கனடா அதற்கு எதிராக உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆவலோடு உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே சீனா அவர்களை தின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.


