News March 29, 2025
தலித் மாணவரின் மண்டையை உடைத்த ஆசிரியர்

விழுப்புரம் அரசுப் பள்ளியில் பட்டியல் சமூக மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் அடித்ததில் மாணவனின் மண்டை உடைந்துள்ளது. இதில் அவரின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
Similar News
News January 15, 2026
செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே மாற்றப்படுகிறாரா?

செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சிலர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளதாம். வரும் தேர்தலுக்குள் இவர் மாற்றப்பட வேண்டும் எனவும் கட்சியினர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
News January 15, 2026
அல்லு அர்ஜுன் தான் கோலிவுட்டின் அடுத்த உச்சமா?

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் தீவிரம் காட்டுகிறார். ரஜினி, கமல் சீனியர் ஆகிவிட்டனர். அதனால் தற்போது கோலிவுட்டில் வெற்றிடம் உருவாகி இருக்கிறதாம். இச்சூழலை பயன்படுத்தி, கோலிவுட்டின் அடுத்த உச்ச நடிகராக மாற, அல்லு அர்ஜுன் முயற்சிக்கிறாராம். அதனால்தான், அட்லீ, லோகேஷ் ஆகியோருடன் இணைவதாகவும், அவர்தான் கோலிவுட்டின் அடுத்த உச்சம் என சிலர் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 15, 2026
தமிழர் இல்லங்களில் பொங்கட்டும் இன்ப பொங்கல்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், பன்மடங்காக பெருகும் எனவும் வாழ்த்து கூறி, வெல்வோம் ஒன்றாக! குறிப்பிட்டுள்ளார்.


