News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

Similar News

News April 7, 2025

அனைத்து கடைகளிலும் தமிழ் பெயர் பலகை வைக்க உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து தொழிற்சாலைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், மே 15 ஆம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் முழுவதும் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும், தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஏப்ரல்.07) அறிவித்துள்ளார்.

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 20 அங்கன்வாடி பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள், 15 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் <>தேதிக்குள் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

வாணியம்பாடி தனியார் பள்ளி காவலாளி கத்தியால் குத்தி கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளி காவலாளி இர்பான் என்பவரை இன்று (07.04.2025) காலை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை கொலையாளிகள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!