News March 29, 2025
சிவகாசியில் 299 கண்காணிப்பு கேமராக்கள்

சிவகாசியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் 299 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிப்பதுடன், பழைய குற்றவாளிகளை அடையாளம் காணுதல், கண்காணிப்பு பணியை எளிதாக்க முடியும். இதேபோல் காரியாபட்டியில் 35, அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Similar News
News November 1, 2025
விருதுநகர்: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 1, 2025
விருதுநகர்: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்து ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News November 1, 2025
புதிய ரவுண்டானவால் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் Gh நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.


