News April 2, 2024
சிவகாசி: திடீரென உயிரிழந்த பசுக்கள்

சிவகாசி அருகே நடையனேரி தாழிகுளத்துபட்டியை சேர்ந்தவர் அய்யனார் 48. இவர் 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் வைத்து விவசாயம் நடத்தி வருகின்றார். அய்யனார் தன் வீட்டின் அருகே மாடுகளுக்கு சமையல் கழிவுநீரை தேக்கி வைத்து அதனை நேற்று வழங்கியுள்ளார். அந்த நீரை குடிக்க இரண்டு பசு மாடுகள் திடீரென உயிரிழந்தது இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். கால்நடை துறையினர் விசாரணை.
Similar News
News February 6, 2026
விருதுநகர்: கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நல பாதிப்பு மற்றும் கடன் பிரச்சனை இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்குள் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

ராஜபாளையம்: ரயிலில் பாய்ந்து தற்கொலை

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(77). இவர் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை – செங்கோட்டை செல்லும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பலத்த காயமடைந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.