News March 29, 2025
ஏன் தோனி முன்னரே களமிறங்கவில்லை?

சோஷியல் மீடியாவில் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை அணியின் கையில் இருந்து நழுவிய போது, அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார். ஷிவம் துபே அவுட்டானதுமே அவர் ஏன் வரவில்லை என பலர் வினவுகின்றனர். அதே நேரத்தில் சிலர், அவர் எப்படியோ 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடிச்சாரே அதுவே போதும் என்றும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News January 22, 2026
ஆஸ்கர் ரேஸில் இடம்பெறாத ‘ஹோம்பவுண்ட்’

98-வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப்பட்டியலில் ‘ஹோம்பவுண்ட்’ இடம்பெறவில்லை. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா பரிந்துரைத்த ‘ஹோம்பவுண்ட்’-க்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடிக்கடி ஜாதி, மத மோதல் நடக்கும் இடத்திலிருந்து தப்பிக்கும் நண்பர்கள் இருவர், சமூகத்தில் உரிய அந்தஸ்து பெற காவலர் தேர்வு எழுதுகின்றனர். அதில், வெற்றி அடைந்தனரா என்பதே ‘ஹோம்பவுண்ட்’.
News January 22, 2026
விடுமுறை.. நாளை முதல் 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறை நாள்கள், குடியரசு தினத்தையொட்டி TN முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு ஜன.23, 24-ல் 955 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஜன.26 அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 800 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
News January 22, 2026
ஆஸ்கர் விருதுகள்: இறுதிப் பட்டியல் வெளியானது

ஆஸ்கர் விருதுகள் பைனல்ஸுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ‘Home Bound’ தேர்வாகாதது ஏமாற்றமளித்துள்ளது. சீக்ரெட் ஏஜென்ட்(பிரேசில்), இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடன்ட்(பிரான்ஸ்), சென்டிமென்டல் வேல்யூ(நார்வே), சிராட்(ஸ்பெயின்), தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்(டுனீசியா) ஆகிய படங்கள் ரேஸில் உள்ளன. மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து பட்டியலை பாருங்கள்.


