News March 29, 2025
கவுன்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆல்லைனில் ரத்து செய்யலாம்

ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை இனி ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். IRCTC இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். பின்னர், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து, தங்களின் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
News April 2, 2025
இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.. Apply Now

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma மற்றும் B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
உங்கள் SBI கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதா?

SBI வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையில் நேற்று திடீர் தடங்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பை சந்தித்தனர். இதனிடையே வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். பணம் இன்னும் வரவு வைக்கப்படாததால் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என பலர் முறையிட்டுள்ளனர். இதற்கு எஸ்பிஐ இன்னும் பதிலளிக்கவில்லை. நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்திருக்கிறீர்களா?