News March 29, 2025
அதிமுகவுக்கு தவெக மாற்று?

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என்று விஜய் பேசியிருக்கிறார். அதாவது அதிமுகவுக்கு தவெக மாற்று என்ற பொருளில் பேசியுள்ளார். இதுவரை ஒரு தேர்தலில் கூட நிற்காத விஜய், தனது கட்சியின் வாக்கு சதவீதத்தை நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கையில், கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவுக்கு மாற்று என எந்த அடிப்படையில் அவர் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News December 27, 2025
ரேஷன் கார்டு ரத்து.. அரசு முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ சரியான காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமோ (அ) ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றோ, e-KYC சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். SHARE IT.
News December 27, 2025
இரு சித்தாந்தத்திற்கு இடையேதான் போட்டி: சீமான்

2026 தேர்தலில் நாதக தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாதகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியிலுக்கும் இடையேதான் தேர்தலில் போட்டி என கூறியுள்ளார். அரசு கொடுக்கும் இலவசங்கள் மக்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், தற்சார்பே தங்கள் பொருளாதார கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 27, 2025
என்றும் தளபதி ரசிகையே: மாளவிகா மோகனன்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே தானும் ஒரு ரசிகையாக விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். விஜய் சாருடன் பணியாற்றியது மிகப்பெரிய பெருமை. அவரை ஒரு நண்பர் என அழைப்பது அதைவிடப் பெரிய பெருமை எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகும் பிரபாஸின் ’ராஜாசாப்’ படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


