News March 29, 2025

சிவகங்கையில் போலீசார் குடும்பம் குமுறல்

image

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

Similar News

News April 3, 2025

சிவகங்கை மக்களே தயாராக இருங்க சென்னைக்கு புதிய ரயில்

image

 சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு இரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104  தாம்பரம்-இராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.இந்த ரயில் சிவகங்கை வழி செல்லும். மக்களே உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News April 3, 2025

சிவகங்கை: வேலை வாய்ப்பு முகாம்

image

சிவகங்கை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர்,சிவகங்கை அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் அழைக்கலாம். SHARE செய்து உதவவும்

News April 3, 2025

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

image

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!