News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளன ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News April 2, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்
News April 2, 2025
பிரபல கொள்ளையர்கள் கைது

ஆட்டோவில் தனியாக பயணிகப்பவர்கள் மற்றும் சாலையில் தனியாக நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த புகாரில், தண்டயார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் விக்னேஷ் இருவரை கைது செய்தனர். 100 சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சினல்களை ஆய்வு செய்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
News April 2, 2025
சென்னையில் இன்றைய இரவு காவலர்கள் விவரம்

சென்னையில் இன்று (01.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.