News March 29, 2025
கடையம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

கடையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் கடையம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அங்கிருந்த வியாபாரிகள் மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தையல் பயிற்சி

தென்காசி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு 8778859095 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மகளிர் உரிமை துறை சார்பில் கேட்டுக் கொள்ளபட்டது.
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 6, 2025
தென்காசியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு பள்ளியில் பயிலும் +2 மாணவர்களுக்கு இடையே சகமாணவன் தலையில் அடித்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவன் சக மாணவனை மிரட்டும் விதமாக பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.