News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News December 27, 2025
சற்றுமுன்: விலை ₹17,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? GST 2.0-க்கு பிறகு பைக்குகளின் விலைகள் குறைந்துள்ளன. தற்போது டிசம்பர் மற்றும் ஆண்டு இறுதி சலுகைகள் அறிவிக்கப்பட்டு, மேலும் விலை குறைந்துள்ளது. ஹோண்டா மற்றும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் சலுகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 27, 2025
உணவு பஞ்சத்தில் ஆப்கன்!

ஆப்கனுக்கு வழங்கி வந்த ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை USA நிறுத்தியது. இதனால் சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் பசி மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள ஐ.நா, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆப்கன் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 30 லட்சம் கூடி உள்ளதாகவும், 2026-ல் சுமார் 2.2 கோடி பேருக்கு உதவி தேவைப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News December 27, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

படிக்கும் வயதில் மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 11-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக கூரியர் நிறுவன ஊழியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி மணிகண்டன் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமாகியுள்ளார். அவரது தாய் அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் போக்சோவில் சிக்கியுள்ளார்.


