News March 29, 2025
KKR vs LSG மேட்ச் தேதி மாற்றம்.. ஏன் தெரியுமா?

வரும் ஏப்.6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த KKR vs LSG அணிகளுக்கு இடையேயான போட்டி, ஏப்.8 மதியம் 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்.6ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் யாத்திரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசாரால் மைதானத்திற்கும், வீரர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால், போட்டி மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2025
ஜிவி டைவர்ஸுக்கு நான் காரணமா? நடிகை விளக்கம்

ஜிவியின் டைவர்ஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நடிகருடன், குறிப்பாக திருமணமான ஆணுடன் நிச்சயமாக டேட்டிங் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்ததால் ஜிவிக்கு டைவர்ஸ் ஆனதாக பலரும் பேசிவருகின்றனர்.
News April 2, 2025
முன்னாள் எம்.பி. முருகேசன் உடல் தகனம்!

உடல்நலக்குறைவால் மறைந்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அ.முருகேசன் (87) உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முன்னாள் காங்., தலைவர் K.S.அழகிரி, திருமா, திமுக நிர்வாகிகள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
News April 2, 2025
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு பின்பு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவரிடம் அறிக்கையைக் கூட்டுக் குழு சமர்ப்பித்தது. அறிக்கை கடந்த பிப்., மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.