News March 29, 2025

மார்ச் 29: வரலாற்றில் இன்று

image

*1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது. *1857 – கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே, பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். *2007 – கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

Similar News

News September 4, 2025

சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேனா ஏபி டி?

image

21-ம் நூற்றாண்டின் சிறந்த ODI பேட்ஸ்மேன்கள் பட்டியலை ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 இடத்தை வழங்கிய அவர், சச்சினுக்கு 4-வது இடத்தை கொடுத்துள்ளார். ஆனால், அடுத்த அவர் செய்தது தான் சச்சின் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. சச்சினை விட தானே சிறந்த பேட்ஸ்மேன் என தனக்கு 2-ம் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த பட்டியலில் ரோஹித் 6, தோனி 7-ம் இடத்திலும் உள்ளனர்.

News September 4, 2025

ரத்த நிலவை காண ரெடியாகுங்க!

image

வரும் 7-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி பயணிப்பதால், செந்நிற ஒளியில் நிலவு பிரகாசிக்கும். இதனால், இதை ‘ரத்த நிலவு’ என வானியலாளர்கள் வர்ணிக்கின்றனர். இரவு 8:58-க்கு தொடங்கும் இந்த கிரகணம், நள்ளிரவு 2:25 வரை நிகழ்ந்தாலும், இரவு 11 முதல் 12:22 மணி வரை ரத்த நிலவு முழுமையாக பிரகாசிக்கும். மொட்டை மாடியில் நின்றும் வெறும் கண்களால் இந்த அரிய நிகழ்வை காணலாம்.

News September 4, 2025

SCIENCE: உங்க Dead Skin Cells காற்று மாசை குறைக்குதா?

image

மனித உடலில் இருந்து 1 மணி நேரத்திற்கு 200 மில்லியன் Dead Skin Cells-களும், 1 நாளுக்கு 5 பில்லியன் Dead Skin Cells-களும் உதிருது. இந்த இறந்த செல்கள், காற்று மாசை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இந்த இறந்த செல்களில் உள்ள Cholesterol மற்றும் Squalene, காற்றில் இருக்கக்கூடிய ozone போன்ற நச்சுக்களின் அளவை 15% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. SHARE.

error: Content is protected !!