News March 29, 2025

17 வருட போராட்டம்.. பழிதீர்த்த RCB

image

CSK அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தனது 17 வருட கனவை RCB நிறைவேற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK அணி, RCB அணியுடன் தோற்றது. அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் RCB அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், 17 வருடம் கழித்து நேற்று நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றுள்ளது.

Similar News

News November 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 534 ▶குறள்: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. ▶பொருள்: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

News November 29, 2025

அப்போ ட்ரோல், இப்போ பாராட்டு: லிங்குசாமி

image

சூர்யாவின் ‘அஞ்சான்’ நேற்று ரீரிலீஸானது. இந்நிலையில், இப்படம் முதலில் ரிலீஸானபோது பலரும் ட்ரோல் செய்ததாக அதன் இயக்குநர் லிங்குசாமி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த படத்தையா ட்ரோல் செய்தார்கள் என தற்போது பலர் தன்னிடம் கூறியதாக நெகிழ்ந்துள்ளார். மேலும், தான் இயக்கிய மேலும் சில படங்களை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் எந்த படத்தை ரீரிலீஸ் செய்யலாம்?

News November 29, 2025

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!