News March 29, 2025
தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 தொழில்நுட்ப உதவியளர்(Field Technician) காலிப்பணியிடம் உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 2, 2025
தூத்துக்குடியில் தோஷப் பாதிப்புகள் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது சக்கரபாணிபெருமாள் கோயில். கும்பகோணத்தை போன்றே இங்கும் சக்கரபாணி பெருமாளாக அருள்கிறார் எம்பெருமான். இங்குள்ள மூலவர், கல்லில் செதுக்கப்பட்டு ஆழிக்கலவை மற்றும் மூலிகைப் பூச்சுகளால் ஆன திருமேனியராக அருள்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள்ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு சென்று, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால்,தோஷம் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்.
News April 2, 2025
இணைப்புச் சாலை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரை இணைப்புச் சாலை அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஏவ வேலு நேற்று நெடுஞ்சாலைகள் மானிய கோரிக்கையின் போதுதெரிவித்தார். பிற மாவட்டங்களில் மேலும் 2 இணைப்பு சாலை திட்டத்தையும் சேர்த்து மொத்த ரூ.230 கோடியில் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.