News March 28, 2025
ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.28) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
ராமநாதபுரம்: செல்போனை தொலைப்பவரா நீங்கள்..!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த <
News August 13, 2025
சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மனு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகனிடம், நாட்டுப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி சேனாதிபதி சின்னத்தம்பி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.
News August 13, 2025
ராமநாதபுரம்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..!

110/33-11 KV மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக-14) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு. *ஷேர்