News March 28, 2025
காரைக்காலில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதல்வர்

காரைக்கால் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Similar News
News August 29, 2025
புதுச்சேரி: பொதுநல அமைப்புகள் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி மின்துறை தனியார் மையம் ஆக்கப்பட்டு பங்கு சந்தையில் அதானி எலக்ட்ரிசிட்டி புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்பு தலைவர்கள் தலைமை மின்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு அதிகாரியிடம் கேட்டறிந்தனர். மக்களுக்கு விரோத செயலில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அரசு எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்புகள் தெரிவித்தனர்.
News August 29, 2025
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., சேர்க்கை

புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மேலாண் இயக்குநர் வெங்கடேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2025-26 கல்வியாண்டின் பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்குப் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சேர்க்கைக்கான கல்வித் தகுதிகள், கட்டண விபரம் www.ccepdy.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 29, 2025
துணை தாசில்தார் போட்டித் தேர்வை எழுதும் 37,000 பேர்

அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு கடந்த மே 5ம் தேதி விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 37,349 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான போட்டித் தேர்வு வரும் 31ம் தேதி இரண்டு அமர்வுகளாக நடக்கிறது என்று புதுச்சேரி நிர்வாக சீர்திருத்தத் துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.