News March 28, 2025
பர்பிள் தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே வீரர்…!

சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
பண்ட்டுக்கும் ராகுல் ட்ரீட்மெண்ட்

கடந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி சொதப்பியதால், LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா அவருடன் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று, பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் LSG தோற்றதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை, சஞ்சீவ் பொதுவெளியில் கடிந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரிஷப் பண்ட் ட்ரெண்டிங்கிலும் உள்ளார்.
News April 2, 2025
75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.
News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.