News March 28, 2025
விஜய் கட்சிக்கு புதுப்பெயர் வைத்த அண்ணாமலை!

தவெக கூட்டத்தில் மோடியை விஜய் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் என்பது சும்மா மைக் எடுத்து பேசிவிட்டு போவது அல்ல எனக் கூறிய அவர், முதலில் விஜய் களத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஊடக வெளிச்சத்துக்காக மோடியை விஜய் விமர்சிப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, ஆதவ் அர்ஜுனாவை சேர்த்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகம், தமிழக லாட்டரி கழகமாக மாறிவிட்டது என விமர்சித்தார்.
Similar News
News October 21, 2025
‘கட்டா குஸ்தி’ தாக்கத்தை ஏற்படுத்தியது: விஷ்ணு விஷால்

ராட்சசனைவிட, கட்டா குஸ்திதான் தன்னை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். OTT தளத்தின் வளர்ச்சியால் ‘கட்டா குஸ்தி’ அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது அடுத்த படமான ’ஆர்யன்’ மக்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ள அவர், அதனால் தனது மகனின் பேயரை(ஆர்யன்) படத்திற்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 21, 2025
காங்கிரஸ் தேசவிரோத கட்சி: தமிழிசை

காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதால் தான், வெளிநாட்டுக்கு சென்று இந்தியா குறித்து ராகுல் காந்தி தவறாக பேசி வருவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் பேசும் எந்த கருத்தையும் மக்கள் மதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தேசிய கட்சி அல்ல என கூறிய அவர், அது ஒரு தேசவிரோத கட்சி என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


