News March 28, 2025
இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில்

கிருஷ்ணகிரியில் புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள் பாலிக்கிறார்கள். மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 15, 2025
மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் நேற்று (ஆக.14) பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
News August 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.