News March 28, 2025
வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, பின்வரும் நாள்களில் வங்கிகள் செயல்படாது: ஏப்.6 (ஞாயிறு, ராமநவமி), ஏப்.10 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.12, 2-ம் சனி, ஏப்.14 (தமிழ் புத்தாண்டு, விஷு), ஏப்.18 (புனித வெள்ளி), ஏப்.26 4-ம் சனி, ஏப்.13, 20, 27 – ஞாயிறு. இந்த தேதிகள் அடிப்படையில் உங்கள் வங்கிப் பணிகள், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Similar News
News January 17, 2026
காங்., நிர்வாகிகளுடன் டெல்லி தலைமை ஆலோசனை

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி தலைமை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ராகுல், கார்கே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 17, 2026
விதைகள் மசோதாவால் பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர்

புதிய விதைகள் மசோதா, விவசாயிகளுக்கும், பாரம்பரிய விதை ரகங்களுக்கும் பொருந்தாது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விளக்கம் அளித்துள்ளார். விவசாயிகள் வழக்கம் போல் சொந்த விதைகளை விதைக்கலாம் எனவும், ஒருவருக்கொருவர் விதைகளை பரிமாரிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். விதைகள் உற்பத்தியை பதிவு செய்வது கட்டாயம் என கூறப்பட்டதால், பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்தது.
News January 17, 2026
Cinema 360°: ‘கருப்பு’ வேட்டைக்கு புறப்படுவது எப்போது?

*அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ வரும் 30-ம் தேதி வெளியாகிறது. *தரமான சிறு படங்களை தியேட்டர், சேட்டிலைட், OTT நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை என இயக்குநர் வசந்தபாலன் காட்டம். *’பராசக்தி’ படத்தின் ‘அடி அலையே’ வீடியோ பாடல் வெளியானது. *‘கருப்பு’ படத்தின் 2-வது பாடல், பட ரிலீஸ் தேதி அறிவிப்புடன் பிப்ரவரியில் வெளியாகும் என தகவல். *சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.


