News March 28, 2025

சு.வெங்கடேசனுக்கு ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் <<15911227>>தந்தை<<>>மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தமடைந்ததாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 27, 2025

கர்ப்பமான AI அமைச்சர்: 83 குழந்தைகள் பிறக்க போகிறது!

image

ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் வகையில், உலகின் முதல் AI அமைச்சரான Diella-ஐ அல்பேனியா சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், Diella கர்ப்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகள் பிறக்க உள்ளதாகவும் அந்நாட்டு PM எடி ராமா அறிவித்துள்ளார். இதில் குழந்தைகள் என்பது AI அஸிஸ்டெண்ட்கள் எனவும், அவை அனைத்து நாடாளுமன்ற விவகாரங்களையும் பதிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

நாங்க 3 பேரு தான் சினிமாவ சீரழிச்சோமா? பா.ரஞ்சித்

image

வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நான் என 3 பேர் தான் தமிழ் சினிமாவை சீரழித்தோமா என்று பா.ரஞ்சித் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘காந்தாரா’ படம் நல்ல வெற்றி பெற்ற பிறகு, தமிழ் சினிமாவில் இப்படியில்லை, இவர்கள் தான் சினிமாவை கெடுக்கின்றனர் என கூறுவதாக அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளில் 600 படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், அதன் இயக்குநர்கள் கோலிவுட்டை உயர்த்த எதுவும் செய்யவில்லையா என்றும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!